| 245 |
: |
_ _ |a தெய்வநாயகப் பெருமாள் கோவில், திருவகீந்திரபுரம், கடலூர் மாவட்டம். - |
| 246 |
: |
_ _ |a தாஸ ஸத்யன், அச்சுதன், ஸ்த்ரஜ்யோதிஷ், அனகஞ்யோதிஷ், த்ரிமூர்த்தி |
| 520 |
: |
_ _ |a திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். இப்பெருமான் மீது வேதாந்த தேசிகன் மும்மணிக் கோவையருளிச் செய்தார். மணவாள மாமுனிகள் பன்முறை எழுந்தருளி மங்களாசாசனம் செய்த தலம். வடமொழியில் தேவநாயக பஞ்சாசத்து என்னும் தோத்திரப் பாடலும், பிராக்ருத மொழியில் அச்யுத சதகம் என்ற தோத்திரப் பாக்களடங்கிய நூலும் இத்தலத்தைப் பற்றிப் பரக்கப் பேசுகின்றன. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் இது ஒன்றாகும். |
| 653 |
: |
_ _ |a கோயில், வைணவம், பெருமாள், திருவகீந்திரபுரம், அயிந்தை, கடலூர், தெய்வநாயகப் பெருமாள், நின்றருளிய மகாவிஷ்ணு, ஏழிசை நாதப் பெருமான், வேதாந்த தேசிகன், மும்மணிக் கோவை, திருமங்கையாழ்வார், திவ்யதேசம், மங்களாசாசனம், மணவாளமாமுனிகள் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.10-ஆம் நூற்றாண்டு |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி. |
| 914 |
: |
_ _ |a 11.1968311 |
| 915 |
: |
_ _ |a 79.7755366 |
| 916 |
: |
_ _ |a தெய்வநாயகன் |
| 917 |
: |
_ _ |a தேவநாதன், மூவராகிய ஒருவன் (தேவன்) |
| 918 |
: |
_ _ |a வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார், பார்க்கவி |
| 924 |
: |
_ _ |a வைகானச ஆகமம் |
| 925 |
: |
_ _ |a நான்கு கால பூசை |
| 926 |
: |
_ _ |a வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, நவராத்திரி |
| 927 |
: |
_ _ |a 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் இப்பெருமாளை நின்றருளிய மகாவிஷ்ணு என்றும் ஏழிசை நாதப் பெருமான் என்றும் குறிக்கின்றன. |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a இங்குள்ள விமானத்தில் வைகுண்டத்தில் அமர்ந்திருப்பதைப் போலவே சுத்த ஸ்த்வ விமானத்தின் கீழ், கிழக்குத்திக்கில் பெருமாளும், தெற்கில் தட்சிண மூர்த்தியாகிய சிவனும், மேற்கு திக்கில் நரசிம்மரும், வடக்கில் பிரம்மாவும் அமைந்துள்ள திறம் மேற்கூறியவைகளோடு வியந்து ஒப்பு நோக்கத்தக்கதாகும். |
| 930 |
: |
_ _ |a இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் ஐந்து அத்தியாயங்களிலும், ஸ்காந்த புராணத்திலும், ப்ரஹன் நாரதீய புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. இத்தலம் பற்றி ஸ்காந்த புராணம் பின்வருமாறு உரைக்கிறது. ஒரு காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்கட்கும் கடும்போர் மூண்டு யுத்தத்தில் அசுரர்கள் வெற்றி பெற்றனர். முறியடிக்கப்பட்ட தேவர்கள் திருமாலைத் துதித்து உதவி புரிய வேண்டுமென்று விண்ணப்பிக்க, அவர்கட்கு உதவ வந்த ஸ்ரீமந் நாராயணன் கருட வாகனத்தின் மேலிருந்து போரிட அசுரர்கள் நாராயணனையும் எதிர்த்து கடும்போர் புரிந்தனர். இறுதியில் ஸ்ரீமந் நாராயணன் சக்ராயுதத்தை ஏவ, அது சகல அசுரர்களையும் அழித்தது. இந்நிலையில் அசுரர்களின் உதவிக்கு வந்த சிவன் சக்ராயுதத்திற்கு எதிராக தனது சூலாயுதத்தை ஏவ அதுவும் சக்கரத்தின் பாற்பட்டு அதற்கோர் அணிகலன் போன்று அச்சக்கரத்தையே சார்ந்து நிற்க, இது கண்ட சிவன் தன் ஞான திருஷ்டியால் நோக்க, ஸ்ரீமந் நாராயணன் அங்கு தனது மும்மூர்த்தி வடிவத்தை அரனுக்கு காண்பித்தார். அவ்வடிவில் ஸ்ரீமந்நாராயணனுடன் பிரம்மா, சிவன், தேவர்களும் தெரிய, சிவன் துதித்து நிற்க, எம்பெருமான் சாந்தமுற்று சக்ராயுதத்தை ஏற்றுக் கொண்டு, சூலாயுதத்தையும் சிவனிடமே சேர்ப்பித்து ரிஷிகள், தேவர்களின் வேண்டுகோளின்படி அவ்விடத்திலேயே கோயில் கொண்டார். அவ்வமயம் தாக சாந்திக்கு நீர் கேட்க, நீர் கொணர கருடன் ஆகாயத்தின் மீது பறக்க, ஆதிசேடன் தரையிலிறங்கி தனது வாலால் பூமியை அடித்துப் பிளந்து தீர்த்தம் உண்டு பண்ணி பகவானுக்கு அளித்தார். இவ்வாறு ஆதிசேடனால் திருவாகிய பூமியை வகிண்டு நீர் கொண்டு வரப்பட்டதால் திரு+வகிண்ட+நீர் (திருஹிந்தபுரம்) எனப் பெயருண்டாயிற்று. ஆதிசேடன் கைங்கர்யத்தாலே இத்தலம் திருவஹீந்திபுரம் என அழைக்கப்படுகிறது. அவன் பெயராலேயே இங்குள்ள தீர்த்தமும் சேஷ தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் எல்லைகளை பூலோகத்தில் திருக்குடந்தைக்கு வடக்கில் 6 யோசனை தூரத்திலும், காஞ்சிக்குத் தெற்கிலும், சமுத்திரத்திற்கு மேற்கே அரையோசனை தூரத்திலும் அமைந்துள்ளது என்று புராணம் வர்ணிக்கிறது. |
| 932 |
: |
_ _ |a இக்கோயில் விமானம் சந்திர விமானம், சுத்தஸ்தவ விமானம் என்ற கட்டிடக் கலை மரபைச் சார்ந்தது. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a சிதம்பரம் பெரிய கோயில், மேலக்கடம்பூர் கோயில், கீழக்கடம்பூர் |
| 935 |
: |
_ _ |a இத்தலம் கடலூர் நகரத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது. |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
| 937 |
: |
_ _ |a அயிந்தை |
| 938 |
: |
_ _ |a கடலூர் |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a கடலூர் வட்டார விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000187 |
| barcode |
: |
TVA_TEM_000187 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000187/TVA_TEM_000187_திருவகீந்திரபுரம்_தெய்வநாயகப்-பெருமாள்-கோயில்-0003.jpg |
: |
|
| Primary File |
: |
cg103v083.mp4
TVA_TEM_000187/TVA_TEM_000187_திருவகீந்திரபுரம்_தெய்வநாயகப்-பெருமாள்-கோயில்-0001.jpg
TVA_TEM_000187/TVA_TEM_000187_திருவகீந்திரபுரம்_தெய்வநாயகப்-பெருமாள்-கோயில்-0002.jpg
TVA_TEM_000187/TVA_TEM_000187_திருவகீந்திரபுரம்_தெய்வநாயகப்-பெருமாள்-கோயில்-0003.jpg
TVA_TEM_000187/TVA_TEM_000187_திருவகீந்திரபுரம்_தெய்வநாயகப்-பெருமாள்-கோயில்-0004.jpg
TVA_TEM_000187/TVA_TEM_000187_திருவகீந்திரபுரம்_தெய்வநாயகப்-பெருமாள்-கோயில்-0005.jpg
TVA_TEM_000187/TVA_TEM_000187_திருவகீந்திரபுரம்_தெய்வநாயகப்-பெருமாள்-கோயில்-0006.jpg
|